திருப்பதி கோயிலை ஓரம்கட்டும் அயோத்தி.. முதல் நாளே வந்த அதிரடி கணிப்பு..!

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று மக்கள் ராமனின் அருளை பெற கதவுகள் திறக்கப்பட உள்ளது.

திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொது விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது, 15 மாநிலங்கள் டிரை டே அறிவித்துள்ளது, மும்பை பங்குச்சந்தை மூடப்பட்டு உள்ளது. அரசு நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவை ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

திருப்பதி கோயிலை ஓரம்கட்டும் அயோத்தி.. முதல் நாளே வந்த அதிரடி கணிப்பு..!

இந்த நிலையில் அயோத்தி கோவில்-க்கு உலகின் பணக்காரர் கடவுளான திருப்பதி ஏழுமலையானை ஓரம்கட்டி அதிகப் பக்தர்களையும், காணிக்கையும் பெறும் கோயிலாக அயோத்தி ராமர் கோயில் உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் டாப் 10 கோயில்களில் முதல் இடத்தில் இருக்கும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 50000 முதல் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 3 கோடி முதல் 4 கோடி மக்கள் திருப்பதிக்கு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 100 மில்லியன் அதாவது 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் எனக் கணித்துள்ளது சிஎன்பிசி. ஏற்கனவே அயோத்தியில் அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து ஹோட்டல்களும் புக்கிங் ஆகியுள்ளது, இதற்கு முக்கியமான உதாரணம்.

இதன் மூலம் இந்தியாவில் அதிகப் பக்தர்களை ஈர்க்கும் இந்து கோயிலாகத் திருப்பதி ஏழுமலையானை முந்தி அயோத்தி ராமர் முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் இது கோயில் திறப்புக்கு முன்பு உள்ள கணிப்புகள் மட்டுமே.

ராமர் கோயிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்தால் மற்ற கோயில்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறையுமா என்ற கேள்வி எழுகிறது. இதனால் திருப்பதியில் காத்திருப்பு காலமும் குறைய வாய்ப்பு உள்ளது எனவும் பக்தர்கள் கணக்கிட்டு உள்ளனர்.

அயோத்திய ராமர் கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 110 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வரும் பட்சத்தில் தலா ஒருவர் 1000 ரூபாய் செலவு செய்தால் 10000 கோடி ரூபாய் சுற்றுலா துறை வர்த்தகத்தை அயோத்தி பெறும் வாய்ப்பு உள்ளது. இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும் பலத்தைச் சேர்க்கும்.

கோவில் காணிக்கை அளவீட்டை இப்போது கணக்கிட முடியாது, காரணம் அயோத்தி கோவில் இன்று தான் கும்பாபிஷேக விழா நடைபெற்று இதனால் அடுத்த வருடம் வசூலை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இந்தக் கணிப்புக்கு அடிப்படையே வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் முன்பு வெறும் 7 கோடி மக்களை ஈர்த்து வந்த நிலையில், கோயில் மேம்பாடு மற்றும் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின்பு பக்தர்களின் வருகை 10 மடங்கு அதிகரித்துத் தற்போது 73 கோடியாக உள்ளது.

இதேபோல் உஜ்ஜெயின் மாககால் கோயிலில் மேம்பாடு மற்றும் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின்பு பக்தர்களின் வருகை 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் வாயிலாகப் புதிதாகக் கட்டப்பட்டு இன்று திறக்கப்படும் ராமர் கோயிலுக்கு வருடம் 10 கோடி பக்தர்கள் வருவது எளிய இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

  • Beta

Beta feature

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *