அயோத்தி ராமர் கோயிலால் லாபம் அடையபோகும் 12 நிறுவன பங்குகள்..!

உத்தர பிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் ராமர் கோயிலுக்கு வருவார்கள் என்பதால் அயோத்தி மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா தளமாக மாறும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் தினமும் 3 லட்சம் பக்தர்கள் அயோத்திக்கு வரக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே அயோத்தியை மையமாக கொண்ட விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா துறையை சேர்ந்த நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயிலால் லாபம் அடையபோகும் 12 நிறுவன பங்குகள்..!

இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அயோத்தியை மையமாக கொண்ட விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா துறையை சேர்ந்த நிறுவன பங்குகளை பரிசீலனை செய்யலாம். அயோத்தி சுற்றுலா தளமாக வளர்ச்சி கண்டால் பலன் அடையும் சில நிறுவன பங்குகள் குறித்து சிறு பார்வை இதோ.

1. பிரவேக்: குஜராத்தை சேர்ந்த பிரவேக் லிமிடெட் நிறுவனம் கண்காட்சி மேலாண்மை, நிகழ்ச்சி மேலாண்மை, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மற்றும் வெளியீடு போன்ற பல்வேறு வணிகபிரிவுகளில் வலுவான வர்த்தகத்தை கொண்டுள்ளது.

அயோத்தி, ரான் ஆஃப் கட்ச், வாரணாசி, டாமன் அண்ட் டையூ மற்றும் சர்தார் சரோவா உள்ளிட்ட பல இடங்களில் சொகுசு கூடார நகரங்கள் மற்றும் சொகுசு ஓய்வு விடுதிகளை வழங்குகிறது. இந்த ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. நேற்று மும்பை பங்குச் சந்தையில இப்பங்கின் விலை ரூ.1,070.30ஆக இருந்தது.

2. இந்தியன் ஹோட்டல்ஸ்: அயோத்தியில் பட்ஜெட் முதல் நட்சத்திர வகை வரையிலான அனைத்து ஹோட்டல் இடங்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இந்தியன் ஹோட்டல் நிறுவனம் ஏற்கனவே இரண்டு சொத்துக்களை கொண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.483ஆக இருந்தது.

3. தாஜ் ஜிவிகே ஹோட்டல்ஸ்: ஹைதராபாத்தை சேர்ந்த ஜிவிகே குழுமம் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு வர்த்தக நிறுவனம் தாஜ் ஜிவிகே ஹோட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ். மும்பை பங்குச் சந்தையில் நேற்று இந்நிறுவன பங்கின் விலை ரூ.247.55ஆக இருந்தது.

4. இன்டர்குளோப் ஏவியேஷன்: விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ) கடந்த மாதம் இறுதியில் டெல்லியில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை தொடங்கியது.

இந்த ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கு 3 சதவீதமும், கடந்த ஓராண்டில் இப்பங்கு விலை 46 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இண்டிகோ பங்கு விலை ரூ.3,043.10ஆக இருந்தது.

5. ஸ்பைஸ்ஜெட்: மற்றொரு விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அயோத்திக்கு சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் நிறைவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்கு விலை ரூ.64.73ஆக இருந்தது. இந்நிறுவன பங்கு கடந்த 6 மாதத்தில் முதலீட்டாளர்களுக்கு 111 சதவீதம் ஆதாயம் அளித்து மல்டிபேக்கர் பங்காக விளங்குகிறது.

6. ஐஆர்சிடிசி: ராமர் கோயில் திறப்பு விழாவின் முதல் 100 நாட்களில், ஜனவரி 19 (கடந்த வெள்ளிக்கிழமை) முதல் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அயோத்திக்கு 1,000 ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) பங்கு விலை இந்த ஆண்டில் இதுவரை சுமார் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 18ம் தேதி வரையிலான ஓராண்டில் இப்பங்கு விலை 45 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஐஆர்சிடிசி பங்கு விலை ரூ.1,026.40ஆக இருந்தது.

7. ஈஸிமை டிரிப்: அயோத்தி பயணங்களுக்காக ரயில், ஹோட்டல்கள்,விமானங்கள் முன்பதிவு போன்றவற்றுக்கு ஈஸிமை டிரிப், தாமஸ் குக் மற்றும் யாத்ரா ஆன்லைன் போன்ற ஆன்லைன் பயண இணையதளங்களுக்கு பெரும் தேவை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஈஸி டிரிப் பிளானர்ஸ் லிமிடெட் (ஈஸிமை டிரிப்) பங்கு விலை ரூ.46.40ஆக இருந்தது.

8. தாமஸ் குக்: மும்பை பங்குச் சந்தையில் நேற்று சுற்றுலா, பயணம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வரும் தாமஸ் குக் (இந்தியா) நிறுவன பங்கின் விலை ரூ.163.60ல் முடிவுற்றது.

9. யாத்ரா ஆன்லைன்:சுற்றுலா, பயணம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று யாத்ரா ஆன்லைன். மும்பை பங்குச் சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.172.85ல் நிறைவடைந்தது.

10. அப்பல்லோ சிந்தூரி ஹோட்டல்ஸ்: இந்நிறுவனம் மருத்துவமனைகள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களில் உணவு விற்பனை நிலையங்களை நிர்வகிக்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் அயோத்தியில் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் மல்டி லெவல்பார்க்கிங் வசதியை கொண்டுள்ளது. இதில் உணவகங்களுக்கான ரூப் டாப் பகுதியும் அடங்கும்.

ஒரே நேரத்தில் 1,000 பக்தர்கள் தங்கும் திறன் கொண்டது. இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கின் விலை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 84 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நேற்று அப்பல்லோ சிந்தூரி ஹோட்டல்ஸ் பங்கு விலை ரூ.2,285ஆக இருந்தது.

11. ஐடிசி: சிகரெட், எப்எம்ஜிசி என பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் ஐடிசி நிறுவனம், ஆடம்பர மற்றும் நடுத்தர ஹோட்டல்ஸ் வணிகத்தில் முன்னணி நிறுவனமான உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கு சுமார் 1 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் ஐடிசி பங்கு விலை 39 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஐடிசி நிறுவன பங்கின் விலை ரூ.468.20ஆக இருந்தது.

12. இஐஎச்: 2023 ஆகஸ்டில் நடைபெற்ற இந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், அயோத்தி மற்றும் வாரணாசியை தீவிரமாக கவனித்து வருவதாகவும், இந்த இடங்களில் உள்ள சாத்தியமான தளங்கள் மற்றும் சாத்தியமான இணைப்புகளை நாங்கள் பார்க்கிறோம் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கின விலை 15 சதவீதமும், கடந்த ஓராண்டில் 68 சதவீதமும் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இஐஎச் நிறுவன பங்கின் விலை ரூ.295ல் நிறைவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்

 

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *