Tik Tok (musical.ly) வரலாறு தெரியுமா ?

0
125

வணக்கம் நண்பர்களே…
Musical.ly இது நமது நடிப்பு திறமையை வெளியுலகிற்கு காட்டும் ஒரு மொபைல் செயலி ஆகும். முதல் முன்மாதிரி ஏப்ரல் 2014 இல் வெளியிடப்பட்டது, மேலும் அந்த ஆண்டின் ஆகஸ்டில் அதிகாரப்பூர்வ பதிப்பு வெளியிடப்பட்டது.இந்த பயன்பாட்டின் மூலம் நீங்கள் 15 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை வீடியோக்களை பதிவு செய்து அதனை வெளியிட முடியும்.

 

மியூசிக்கலியில் பல இளைஞர்கள் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றனரர். பொழுதுபோக்குக்காக தொடங்கப்பட்ட இந்த செயலியில் வித்தியாசமான வேடம் அணிந்து டப்ஸ்மாஷ் செய்வது இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம், musical.ly 90 மில்லியன் பதிவு செய்யப்பட்டபயனர்களைக் கொண்டிருந்தது.2017 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த பயன்பாட்டை 200 மில்லியன் பயனர்கள் அடைந்தனர்.

நவம்பர் 2017 Musical.ly Tik Tok உடன் இணைந்தது .பின் ஆகஸ்ட் 2018 இல் இருந்து Musical.ly என்பதில் இருந்து விடுவிக்கப்பட்டு Tik Tok என்று அழைக்கப்பட்டது. டிக் டோக் இப்போது 150 மார்க்கெட்களில் சுமார் 75 மொழிகளில் கிடைக்கிறது. உள்ளூர் கலச்சாரத்துடன் தொடர்புப்படுத்திக் கொண்டு, பயணர்கள் தங்களது மொழிகளில், தங்களுக்கு பிடித்த வீடியோக்களை தேர்வு செய்து நடிப்பதற்கு ஏற்ப இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

musical.ly ஆனது சீன நாட்டில் ஷாங்காய் என்ற இடத்தில் நீண்ட கால நண்பர்களான அலெக்ஸ் ஜு மற்றும் லுயு யங் ஆகியோர்களால் துவங்கப்பட்டது.

 சீனாவை சேர்ந்த அலெக்ஸ் ஜு அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் கட்டிடக்கலை இயக்குனராக பணிபுரிந்து வந்தார் ஒருமுறை அவரது கைபேசியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது  கைபேசியில் உள்ள அனைத்து செயலிகளும் அமெரிக்காவில் உருவாக்க பட்டிருப்பதை கவனித்தார்  ஏன் சீன நாட்டில் இருந்து அதிகமான செயலிகள் உருவாகவில்லை என்று மனதில் கேள்வி எழுந்து கொண்டே இருந்தது அப்பொழுது அவரது மனதில் ஒரு எண்ணம் தோன்றியது நாம் ஏன் ஒரு செயலியை உருவாக்க கூடாது என்று அது பற்றி அவரது நண்பர்களிடம் விவாதித்து அனைவரிடமும் நிதி திரட்டினார்.

அலெக்ஸ் ஜு

முதல் முயற்சி

musical.ly ஆனது நாம் நடிப்பதற்காகவோ,பொழுது போக்கிற்காகவோ உருவாக்கப்பட்டது அல்ல.அவர் முதலில் உருவாக்க நினைத்த செயலி கல்வி சம்பந்தமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.  கல்வி சம்மந்தப்பட்ட அந்த செயலியினை சீனாவில் ஒரு கணிப்பொறியாளர் குழுவினை கொண்டு வெற்றிகரமாக வடிவமைத்தார்.

ஒரு தலைப்பு பற்றி அந்த துறை சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆராச்சியாளர்கள், மருத்துவர்கள் … என அனைத்து துறைகளை சார்ந்த பலரும் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் காணொளி அந்த செயலியில் வெளியிட வேண்டும் அதாவது மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்த செயலியில் வந்து பார்த்து அதனை தெளிவுபடுத்தி கொள்ள முடியும். ஆனால் அந்த முயற்சி வெற்றி அடையவில்லை. ஒரு பெரியக்கருத்தை அவ்வளவு குறுகிய மணித்துளிகளில் கூற அனைவரும் தயங்கினர்.  ஆனாலும் அவர் முயற்சியை கைவிடவில்லை மேலும் அவர் கையில் அவர் சேகரித்த தொகையில் இருந்து 5% மட்டுமே மீதம் இருந்தது.

musical.ly உருவான கதை

அவர் தன் நண்பர்களிடம் ஆலோசனை செய்தார். அந்த செயலியில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தார்.அதாவது இந்த செயலியில் முன்னரே சில ஆடியோ ஆனது பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் அதற்கு நாம் பாவனை செய்தால் போதும் இதுதான் இந்த செயலியின் புதிய அம்சமாகும். முதலில் அமெரிக்க இளைஞர்களிடையே பிரபலமானது.பிறகு அணைத்து நாடுகளிலும் பிரபலமானது

இந்த செயலியின் மூலம் உருவாக்கப்படும் விடீயோக்கள் அனைத்தும் மற்ற செயலிகளான Facebook , Instagram மற்றும் Twitter ஆகிய தளங்களில் பரவியது ஆனால் இந்த செயலியில் இருந்துதான் இந்த வீடியோ பகிர பட்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதற்காகதான் அவர்களின் வியாபாரக் குறி அனைத்து விடீயோக்களிலும் நுழைக்கப்பட்டது.

அதன் பின் தன் இந்த செயலி ஆனது அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது.

இந்தியா மட்டுமின்றி பிரேசில், ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்-காங், ஜப்பான், இந்தோனேஷியா, கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், ’மிகவும் சுவாரஸ்யமான செயலி’ என்ற பிரிவில் ‘டிக் டோக்’ செயலி விருதுகளை பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் இந்த ஆண்டின் ‘சிறந்த செயலி’ ஆகவும் ‘டிக் டோக்’ தேர்வாகியுள்ளது.

இந்த செயலின் மூலம் பலர் பிரபலம் அடைந்தனர், பலர் கிண்டல் செய்யப்பட்டனர், பலர் நல்ல கருத்துகளை சொன்னனர் , பலர் ஆபாசம் காட்டினார், பலர் இந்த செயலிக்கு அடிமையாகினர்.

tik tok ஆல் பறிபோன உயிர்

இந்த செயலில் பெண் போல் வேடம் அணிந்து பல பாடல்கள் மற்றும் டைலாக்குகளை செய்து கலையரசன்  என்ற இளைஞர் அசத்தி வந்தார்.

 

கலையரசன்

இந்நிலையில்  பெண் போல் பாடி நடித்ததை கேலி, கிண்டல் செய்ததால் கலையரசன். 2018 அக்டோபர் மாதம் சென்னையின் வியாசார்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து கலையரசன் தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு விஷயத்தில் சில நன்மைகள் உள்ளது சில தீமைகள் உள்ளது ஆனால் musical.ly நன்மையா இல்லை தீமையா என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

அடுத்ததகவல் விரைவில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here